LOADING

Type to search

உலக அரசியல்

அரிய வகை மீனை தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

Share

அட்லாண்டிக் கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் போக்லாந்து தீவுகள். இந்த தீவுக்கூட்டத்தை இங்கிலாந்து நிர்வகித்து வரும் நிலையில் தீவுக்கூட்டம் தங்களுக்கு சொந்தமானது என்று அர்ஜென்டினா கூறிவருகிறது. போக்லாந்து தீவில் சுமார் 3 ஆயிரத்து 800 பேர் வசித்து வருகின்றனர்.

இதனிடையே, அட்லாண்டிக் கடலின் போக்லாந்து தீவுப்பகுதியில் டூத்பிஷ் என்ற அரிய வகை மீன் காணப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ல செயிண்ட் ஹெலீனா தீவில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் உள்பட 30 பேர் அரிய வகை டூத்பிஷ் மீனை தேடி கடந்த திங்கட்கிழமை மீன்பிடி படகில் புறப்பட்டுள்ளனர்.

போக்லாந்து தீவில் இருந்து கடலில் 200 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் கடலில் மாயமாகினர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மாயமான 22 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலில் விழுந்த எஞ்சிய 22 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.