LOADING

Type to search

உலக அரசியல் விளையாட்டு

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் பங்கு பற்றும் மிகப் பெரிய போட்டியே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

Share

ஒலிம்பிக் கோடை கால விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறும் மாபெரும் நிகழ்ச்சியாகும்.

ஒலிம்பிக் போட்டி கிரேக்கத்தில்

( Greece ) கிமு 776 (776 BC) இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பியா நகரத்தில் முதல் முதலில் ஆரம்பிக்கப் பட்டது. .

ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப் படுவது முக்கியமான நிகழ்வாகும். அதற்கு முன்னதாக ஒலிம்பிக் தீபம் கிரேக்கத்தில் ஒலிம்பியா விளையாட்டு மைதானத்தில்
பரவளைய கண்ணாடியில்(Parabolic Mirror) சூரியனின் ஒளிக் கதிர்களை (Rays of the Sun) பயன் படுத்தி ஏற்றப்பட்டு ஒலிம்பிக் நடை பெறும் நாட்டிற்கு எடுத்து வரப்படும்.

பெரும்பாலும் இது வான் வழியாகவே கொண்டு செல்லப்படும். 2024 ல் ஒலிம்பிக் தீபம் கிரேக்கத்தில் இருந்து நீர் (மத்திய தரைக்கடல்) வழியாகவே பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு நதி வழியாக பிரான்சுக்குள் சென்றடைந்தது.

பழைய கிரேக்க ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தொடர்ச்சியாக தற்கால சர்வதேச ஒலிம்பிக் விளங்குவதை அடையாளப் படுத்துவது இத் தீபமாகும்.

தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1896 ல் கிரேக்கத்தில் அதென்ஸ் (Athens )நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

2024 ஒலிம்பிக் போட்டி பிரான்சின் (France )தலை நகர் பரிசில் ஆடி மாதம் 26 ம் திகதி ஆரம்பமாகி ஆவணி மாதம் 11 ம் திகதி நிறை வடைய இருக்கின்றது.

நூறு ( 100 ) ஆண்டுகளுக்கு பின் பரிசில் இவ் விளையாடாடுப் போட்டி நடை பெறுகின்றது.
இப்போட்டி பல புதுமைகளைக் கொண்டிருக்கின்றது.

தீபம் நீர்வழியாக கொண்டு வரப்பட்டது, வழமையாக ஒலிம்பிக் ஆரம்ப விழா உள் அரங்க மண்டபத்தில் நடைபெறும். இம்முறை பரிசில் இந்த ரக நிகழ்வு வெளிப்புறத்தில் , நதியில் நடைபெற இருக்கின்றது.

ஒலிம்பிக் விழாவில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும். ஒலிம்பிக் கொடி முதல் முதலில் 1920 ம் ஆண்டு பெல்யியத்தில் (Belgium)நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏற்றப்பட்டது.

ஒலிம்பிக் கொடி ஏற்றப் படுவதுடன் ஒலிம்பிக் கீதமும் இசைக்கப்படும்

ஒலிம்பிக் கொடியில் ஐந்து இணைந்த வளையங்கள் காணப்படும்.

இந்த ஐந்து வளையங்களும் உலகின் ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன.

ஒலிம்பிக் கொடி வெள்ளை நிறமாகும்.

அதில் மஞ்சல் நிற வளையம் ஆசியா ( Asia) கண்டத்தையும்

பச்சை நிற வளையம் ஐரோப்பா கண்டத்தையும்
(Europe )

சிவப்பு நிற வளையம் அமெரிக்கா(வட , தென்) கண்டத்தையும்
(America )

கறுப்பு நிற வளையம் ஆபிரிக்கா கண்டத்தையும் (Africa )

நீலம் நிற வளையம் அவுஸ்திரேலியா கண்டத்தையும்(Australia ) குறிக்கின்றன.

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பாதுகாப்பாக தங்குவதற்கு ஒலிம்பிக் கிராமம்( Olympic Village ) அமைக்கப் பட்டிருக்கும்.

இம் முறை இக்கிராமத்தில் ஏறக்குறைய 14500 பேர் வரை தங்குவார்கள் என எதிர் பார்க்கப் படுகின்றது.

ஒலிம்பிக்கில் உலக சமாதானத்தை வெளிப்படுத்த வெள்ளை நிற புறா பறக்க விடப்படும்.
ஒலிம்பிக்கில் ஏறக்குறைய 195 நாடுகளின் விளையாட்டு வீரர்களும் , வீராங்கனைகளும்
400க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களில் பங்கு கொள்ள இருக்கின்றார்கள்.

ஒலிம்பிக் போட்டியில் முதல் மூன்று இடத்தில் வெற்றி பெறுபவர்ககளுக்கு முறையே
1. தங்கம் (Gold)
2. வெள்ளி (Silver )
3. வெங்கல (Bronze ) பதக்கங்கள் வழங்கப் படும்.

பழங்கால கிரேக்க ஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒலிவ் மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட முடி (Crown) சூட்டப்படும்.

ஒலிம்பிக் போட்டி இறுதி நாளிலும் பல சிறப்பான விழாக்கள் நடைபெறும். எடுத்துக்காட்டாக ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு அடுத்த முறை ஒலிம்பிக்கை நடத்தும் நாட்டிடம் அக் கொடி கையளிக்கப்படும்.

விழா சிறப்பாக நடை பெற்றதன் நிறைவாக ஒலிம்பிக் தீபமும் அடைக்கப்படும்.

இந்த நூறாவது ஆண்டு ஒலிம்பிக் உலகத் தமிழருக்கும் , தமிழ் நாட்டுத் தமிழருக்கும், ஈழத்தமிழருக்கு பெருமை சேர்க்கும் ஒலிம்பிக்காக இருப்பதுடன் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் பெருமை மிக்க நிகழ்வாக அமைய இருக்கின்றது.

பரிசில் ஈழத்தமிழன் தர்சன் செல்வராசா ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி தமிழ் மக்களின் மனதில் ஒளி ஏற்றிய நிகழ்வு தமிழனை உலகுயரச் செய்துள்ளது.

தமிழ் நாட்டில் இருந்து மூன்று தமிழ் வீராங்கனைகளும் ஈழத்தில் இருந்து தமிழ் விளையாட்டு வீரனும் இம் முறை ஒலிம்பிக்கில் பங்கு கொள்வது

தமிழ் இனத்தின் பெருமையையும் , திறமையையும் என்றென்றும் உலகம் கொண்டாடும் என்பதை கண் முன்னே காட்டுகின்றது.

ஆசிரியர்
ஜோதி மூர்த்தி