LOADING

Type to search

கனடா அரசியல்

“அரங்கேற்றம் காணும் தனது மாணவிகளுக்கு உயர்ந்த தரத்தோடும் நடனங்களைக் கற்றுக் கொடுப்பவர் ஆசிரியை அற்புதராணி ஆவார்”

Share

அரங்கேற்றச் செல்வி கயல் ஜனனியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் மதுரை முரளிதரன் அவர்கள் புகழாரம்

“நான் இதுவரை பல நூற்றுக்கணக்கான பரதநாட்டிய அரங்கேற்றங்;களில் உரையாளராக அழைக்கப்பெற்றுள்ளேன். அரங்கேற்ற மேடைகளுக்குச் செல்லும் நடனச் செல்விகளுக்கு மட்டுப்படுத்தப்பெற்ற வகையில் உருப்படிகளையே ஆசிரிய ஆசிரியைகள் கற்றுக்கொடுப்பது வழக்கம். ஆனால் இன்றைய நிகழ்வில் அரங்கேற்றம் காணும் தனது மாணவிக்கு ஆர்வத்தோடும் உயர்ந்த தரத்தோடும் நடனங்களைக் கற்றுக் கொடுக்கும் பக்குவம் ஆசிரியை அற்புதராணி அவர்களுக்கு உள்ளது என்பதை நான் உணர்ந்தேன். இந்த அரங்கேற்றத்தில் நான் இதுவரை பார்த்து ரசித்த உருப்படிகளை அடிப்படையாக வைத்தே நான் இந்த உண்மையை உங்கள் மத்தியில் தெரிவிக்கின்றேன்”

இவ்வாறு அண்மையில் சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற அரங்கேற்றச் செல்வி கயல் ஜனனியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை முரளிதரன் அவர்கள் புகழாரம் சூட்டினார்.

‘அற்புத நர்த்தனாலயம்’ நாட்டியப் பள்ளியின் அதிபர் ஶ்ரீமதி அற்புதராணி கிருபைராஜா அவர்களின் மாணவியான செல்வி கயல் ஜனனி; செல்வகுமார் அவர்களின் அரங்கேற்றம் அன்று அழகுற இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய உலகப் புகழ் பெற்ற நடனக் கலைஞர் மதுரை முரளிதரன் அவர்கள் தனது வாழ்த்துரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்

” ஒரு நடனக் கலைஞருக்கு மிக அவசியமாக இருக்க வேண்டிய தகைமைகள் சிலவுண்டு. அவையாவன அங்க சுத்தம், அடவு சுத்தம், அழகிய பாபம், நினைவுத் திறன் மற்றும் இசைத் திறன் ஆகியவை தான். இவை அனைத்தும் ஒரு நடனக் கலைஞருக்கு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்தளவிற்கு அவர் தனது நடனப் பயணத்தில் வெற்றிகளை ஈட்டுவார். எனது அவதானிப்பில் இன்றைய எமது அரங்கேற்றச் செல்வி கயல் ஜனனி அவர்கள் இந்த தகைமைகள் அனைத்தையும் கொண்டவராக விளங்குவதை நான் அவதானித்தேன். எனவே அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மேலும் பரதநாட்டியத்தை கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் அனைவருக்கும் அது ஒரு தவமாகவே கணிக்கப்பெறும் .அத்துடன் நடனத்துறையில் முன்னேற்றத்தை அடைவதற்கு உள்ளம்- உடல்- – உயிர்- அனைத்தையும் நாம் அர்ப்பணிக்க வேண்டும். ” என்று தனது மனந்திறந்த உரையை மதுரை முரளிதரன் அவர்கள் ஆற்றிச் சென்றார். தனது உரையில் அன்றைய பக்கவாத்தியக் கலைஞர்களின் ஆற்றலையும் ஒத்துழைப்பையும் மனந்திறந்து பாராட்டினார்.

இங்கே காணப்படும் படங்கள் அரங்கேற்றச் செல்வி கயல் ஜனனி அவர்கள் அரங்கேற்றத்தில் எடுக்கப்பட்டவையாகும்

—சத்தியன்