ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி புதூர் அப்பு கைது!
Share
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, டில்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை காவல்துறை கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரின் இல்லத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் இதில் தொடர்புடையவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும், கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் குறிப்பிட்டார். இதில் ரெளடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு டில்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை காவல்துறை கைது செய்தனர்.