கனடாவின் நீண்டகால கொன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெர்லின் கிளாடு, லிபரல் கட்சிக்கு தாவி கனடிய அரசியலில் மீண்டும் ஒரு வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
“நமது தேசத்தின் எதிர்காலத்திற்கான இந்த முக்கியமான தருணத்தில், பரந்த அளவிலான அனுபவங்களையும் கண்ணோட்டங்களையும் கொண்ட கனடிய அரசியல்வாதிகள் கனடாவை வலிமையாக்கும் வகையில் எம்மோடு ஒன்றிணைந்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் மற்றும் நமது லிபரல் கட்சியின் புதிய உறுப்பினராக மெர்லின் கிளாடுவை இன்று வரவேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.” என பிரதமர் மார்க் கார்னி புகழாரம்
கடந்த 8ம் திகதி புதன்கிழமை இந்த கட்சி தாவல் இடம்பெற்றுள்ளது என்பதும் பிரதமர் மார்க் கார்னி அவர்களை உடனடியாக அவர் சந்தித்து உரையாடியதாகவும் ஒட்டாவா செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது சார்னியா —லாம்டன் —பெக்வானாங் என்று அழைக்கப்படும் தொகுதியின் நான்கு முறை கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மெர்லின் கிளாடுவை, பிரதமர் மார்க் கார்னி அவர்கள் தனது லிபரல் கட்சி என்னும் ‘இல்லத்திற்கு’ வரவேற்றார். அண்மைக் காலத்தில் மத்திய கொன்சர்வேரட்டிவ் கட்சியிலிருந்து லிபரல் கட்சிக்கு மாறிய நான்காவது கன்சர்வேடிவ் உறுப்பினர் ஆவார். அடுத்த திங்கட்கிழமை நடைபெறும் இடைத்தேர்தலில் கியூபெக்கின் டெர்போன் தொகுதியில் லிபரல் கட்சி வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், இந்த ஒரு தொகுதி கார்னிக்கு பெரும்பான்மையை வழங்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காரணம் அதில் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவரும் லிபரல் கட்சியில் இணைந்து கொள்வார் என்ற வகையில் கருத்துக்கள் அங்கு வெளிவந்துள்ளதாகவும் அறியப்பெறுகின்றதுஇ
கட்சி மாறிய பாராளுமன்ற உறுப்பினர்ட கிளாடு, தனது சமூகப் பழமைவாத நிலைப்பாடுகளுக்காகவும், சக உறுப்பினர்களுடன் இணக்கமாகப் பழகும் பாணிக்காகவும் நாடாளுமன்ற வளாகத்தில் நன்கு அறியப்பட்டவர். அவர் வசீகரமானவர், ஒத்துழைப்புத் தருபவர், மற்றும் தனது கருத்துக்களை உரக்கச் சொல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் என்று சக கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் புகழாரம் சூட்டப்பெற்றவர்கள் என்பதும் . கடந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தனது தொகுதியில் எளிதான வெற்றியைகொன்சர்வேர்ட்டிவ் கட்சி சார்பில் பெற்றார்.
2016-ல், ‘மெக்லீன்ஸ்’ ஆங்கில இதழ் இவரை மிகவும் சக உறுப்பினர்களுடன் இணக்கமாகப் பழகும் நாடாளுமன்ற உறுப்பினர் என்று பெயரிட்டதுடன், “கட்சி எல்லைகளைக் கடந்து தொடர்ந்து பணியாற்றும் ஒரு விசுவாசமான கன்சர்வேடிவ் உறுப்பினர்” என்றும் வர்ணித்திருந்ததது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் அவர் கொண்டுவந்த இரண்டு தனிநபர் மசோதாக்கள் சட்டமாகியுள்ளன; முதலாவது, நோய்த்தணிப்புப் பராமரிப்புக்கான தேசியக் கட்டமைப்பை நிறுவியது, இரண்டாவது, நிறுவனங்கள் வங்குரோத்து அடையும் நிலைக்கு வந்த பின்னர் ஊழியர்களின் ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவியது. அவர் பெண்களின் நிலை குறித்த குழுவிற்குத் தலைமை தாங்குகிறார், மேலும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை, கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லியேவின் தலைமயிலான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் குடியுரிமை அமைச்சின் நிழல் அமைச்சராக இருந்தார்.
இவரது கட்சித் தாவல் தொடர்பாக தனது பிரத்தியேக சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து பகிர்வைச் செய்துள்ள பிரதமர் மார்க் கார்னி அவர்கள் பின்வருமாறு விதந்துரைத்துள்ளார். “நமது தேசத்தின் எதிர்காலத்திற்கான இந்த முக்கியமான தருணத்தில், பரந்த அளவிலான அனுபவங்களையும் கண்ணோட்டங்களையும் கொண்ட கனடிய அரசியல்வாதிகள் கனடாவை வலிமையாக்கும் வகையில் எம்மோடு ஒன்றிணைந்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் மற்றும் நமது லிபரல் கட்சியின் புதிய உறுப்பினராக மெர்லின் கிளாடுவை இன்று வரவேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”