பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்தனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முல்தான் நகர் அருகே ஷெர் ஷா என்ற பகுதியில் அதிகாலை 5 மணியளவில் பயணித்தபோது ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இந்த விபத்தில் ரெயிலில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>