LOADING

Type to search

உலக அரசியல்

லெபனான் மீது தாக்குதல் – இஸ்ரேல் அறிவிப்பு

Share

காசா மீதான போரை தொடர்ந்து லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர் பகுதிகள், எல்லையில் உள்ள தெற்கு லெபனானில் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. மேலும் லெபனானுக்குள் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இதில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் சுமார் 12 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியுள்ளது. அதன்படி பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. மேலும் லெபனானின் வடக்கு பகுதியில் முதல் முறையாக தாக்குதல் நடத்தியது. வடக்கு பெடாவியில் உள்ள அகதிகள் முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டன.

இதேபோல் லெபனானின் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனானின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வடக்கு பகுதியிலும் இஸ்ரேலின் தாக்குதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.