LOADING

Type to search

உலக அரசியல்

மெக்சிகோவில் 6 நாட்களில் மேயர் அலெஜான்ட்ரொ படுகொலை

Share

மெக்சிகோவில் உள்ள குவேரோ மாகாணத்தில் சுமார் 2,80,000 பேர் வசிக்கும் சில்பான்சிங்கோ நகரின் மேயர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் என்பவர் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார். இந்நிலையில், மேயராக பதவியேற்ற 6 நாட்களில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குவேரா மாகாணத்தில் சமீப காலமாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கு கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுத்தேர்தலின்போது சுமார் 6 வேட்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.