தொண்டைமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் வன்னி, மலையகம் பகுதிகளுக்கு ரூபா 385,000 உதவிகள்!
Share
யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டைமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மலையகம் பண்டாரவளை அயிஸ்லெபி தமிழ் வித்தியாலய மாணவர்களின் தேசிய மட்ட நாடக, நாட்டிய போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கான நிதிச் செலவுகளுக்காக ரூபா 50,000 நிதியும், பண்டாரவளை சௌதம் தமிழ் மகாவித்தியாலய வாணி விழா நிகழ்வின் அன்னதானப் பொருள்களுக்காக ரூபா 125,000 நிதியும், பாடசாலை நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டதுடன், வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பெரியகுளம் பிள்ளையார் ஆலய மீள் கட்டுமானப் பணிக்காக ரூபா 100,000 நிதியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு ருபா 110,000 பெறுமதியான அத்தியவசியமான பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையிலான தொண்டர்கள் நேரடியாகச் சென்று வழங்கிவைத்தனர்.