LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஈ.பி.டி.பி கட்சி சுரேஸ் பிரேமச்சந்திரனை எவ்வாறு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளராக ஏற்றுக்கொண்டீர்கள்- பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்

Share

தற்போது பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதுபானச் சாலைகளுக்குரிய லைசன்ஸ் பெற்று கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிக் கொண்டுள்ளதை கேள்விப்பட்டு எமது தமிழ் மக்கள் கொதித்த வண்ணம் உள்ளனர். அதற்கு மேலாக ஈ.பி.டி.பி உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் பலவருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் இல்லாமல் மட்டக்களப்பு நகரில் மதுபானச் சாலைக்குரிய லைசன்ஸ் பெற்று அங்கு தொடர்ச்சியாக பணம் சம்பாதித்து வருகின்றார். இந்த லைசன்ஸ் அவருக்கும் டக்ளஸ் தேவானந்தாவினால் பெற்றுக்கொடுக்கப்படடது என்று மட்டக்களப்பில் மக்கள் பேசிக்கொள்கின்றார்கள். இவ்வாறான ஒரு துரோகியை அதாவது சுரேஸ் பிரேமச்சந்திரனை எவ்வாறு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளராக ஏற்றுக்கொண்டீர்கள்- என யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து கேள்வி எழுப்பினர் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்புமனுவை தாக்கல் செய்தது. அன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், முதன்மை வேட்பாளருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் யாழ்ப்பாணம் பஸ்நிலையத்திற்கு அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களைப் பார்த்து பொதுமக்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியதாக தெரியவருகின்றது.

இவ்வாறு மக்கள் கேள்வி எழுப்பியபோது சுரேஸ் பிரேமச்சந்திரன் அங்கிருந்து நழுவிச் சென்றதாகவும் எமது செய்தியாளர் அ றிவித்துள்ளார்.