மக்கள் மத்தியில் அதிருப்த்தியைச் சந்தித்து வெற்றி வாய்ப்புக்கள் குறைந்துள்ள நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை உட்பட 4 மாவட்டங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது
Share
ந.லோகதயாளன்.
தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை தவிர்ந்த 4 மாவட்டங்களில் 9ம் திகதி தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 4 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி மற்றும் அம்பாறை மாவட்டங்களிற்கான வேட்பு மனுக்கள் 9 ம் தாக்கல் செய்யப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்துற்கான வேட்பு மனு திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் குகதாசனால் 10ம் திகதி வியாழக்கிழமை காலை தாக்கல் செய்யப்பட்டது.
இதேநேரம் யாழப்பாணம் மாவட்ட வேட்புமனு சி.சிறிதரன் ஊடாகவும், வன்னி மாவட்ட வேட்பு மனு ப.சத்தியலிங்கம், மட்டக்களப்பு இ.சாணக்கியன் மற்றும் அம்பாறை கலையரசன் ஊடாகவும் தாக்கல் செய்யப்பட்டன.