LOADING

Type to search

இந்திய அரசியல்

காளி கோயிலுக்கு போடி பரிசளித்த தங்க கிரீடம் களவு போனது

Share

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் உள்ள ஐஸ்வரிபூரில் காளி கோவில் உள்ளது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஸ்வரி கோயில் கருதப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த கோவில் மிகவும் பிரபலமானது. பின்னர் 13 ஆம் நூற்றாண்டில் லக்ஷ்மன் சென் என்பவரால் புதுப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் ராஜா பிரதாபதித்யா 16 ஆம் நூற்றாண்டில் கோயிலை மீண்டும் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

பிரதமர் மோடி மார்ச் 27, 2021 அன்று வங்கதேசம் சென்றிருந்தார். அப்போது, மோடி இந்தக் கோயிலுக்குச் சென்று வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை பரிசாக வழங்கினார். அன்று முதல் இந்த கிரீடம் சாமி சிலைக்கு வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் கிரீடத்தை திருடிச் சென்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோவிலில் பூஜைகள் முடிந்து, துப்புரவு பணியாளர்கள் வந்து பார்த்தபோது, கிரீடம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோவிலுக்குள் யாரோ நுழைந்து சாமியின் சிலையில் இருந்த கிரீடத்தை அகற்றும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் திருடப்பட்டது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காளி கோவிலுக்கு, பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் திருடப்பட்டது குறித்து, வங்கதேச அரசிடம் கவலை தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி கிரீடத்தை மீட்டு குற்றவாளிகளை தண்டிக்க வங்காளதேசம் உத்தரவிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு இந்தக் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, இந்தக் கோயிலில் இந்தியாவும் சமுதாயக் கூடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார். இந்த சமுதாயக் கூடத்தை சமூக, மத மற்றும் கல்வித் திட்டங்கள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்றும் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது நிவாரண முகாம்களாகவும் பயன்படுத்தலாம் என்று மோடி கூறியிருந்தார். வங்கதேசத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்து கோவிலில் கிரீடம் திருடப்பட்டது அங்குள்ள இந்துக்களுக்கு கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.