LOADING

Type to search

இந்திய அரசியல்

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

Share

மும்பை மீராரோடு பகுதியைச் சேர்ந்தவர் நதீம் அகமத். இவரது மனைவி அம்ரீன் கான். கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். அம்ரீன் பாந்த்ராவில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். குழந்தைகள் நதீம் அகமத்துடன் வசித்து வந்தனர். இதையடுத்து குழந்தைகளை தனது பொறுப்பில் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி அம்ரீன் பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த கோர்ட் குழந்தைகளை அம்ரீனிடம் ஒப்படைக்க நதீம் அகமத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து மீரா பயந்தரில் வசிக்கும் தனது கணவரிடமிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக அம்ரீன் வந்தார். குழந்தைகளை தாயுடன் அனுப்ப நதீம் அகமத் மறுத்தார். அம்ரீனுடன் போலீஸாரும் சென்றிருந்தனர். நதீம் அகமத் வீட்டிற்கு சென்ற போது அவரது வீடு பூட்டி இருந்தது. இதனால் பக்கத்து வீட்டில் விசாரித்து பார்த்தபோது யாரும் சரியான தகவல் கொடுக்கவில்லை. இதனால் போலீஸாரும், அம்ரீனும் சிறிது நேரம் கழித்து வந்தனர்.

அங்கு நதீம் அகமத் இருந்தார். அவரிடம் குழந்தைகள் குறித்து கேட்டதற்கு, ”குழந்தைகள் தங்களது பாட்டியுடன் அஜ்மீர் சென்று இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகள் வரும் வரை அம்ரீனிடம் அங்கேயே இருக்கலாமா? என்று போலீஸார் கேட்டனர். ஆனால் அம்ரீன் மறுத்து வெறுங்கையோடு வீடு திரும்பினார். ஆனால் அம்ரீன் தனது மகள் குறித்து விசாரித்த போது 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படிப்பது தெரிய வந்தது. உடனே அம்ரீன் தனது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்றார். அங்கு நதீம் அகமத் கத்தியோடு சுற்றிக்கொண்டிருந்தார். அவர் தனது மனைவியை பார்த்தவுடன் அவரிடம் வந்து வாக்குவாதம் செய்தார். நடுரோட்டில் இருவரும் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் நதீம் அகமத் தனது கையில் இருந்த கத்தியால் சரமாரியாக அம்ரீனை குத்தினார். அதோடு கழுத்தை அறுத்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்றுவதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது. நெஞ்சு மற்றும் கழுத்தில் குத்திவிட்டு நதீம் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். நடு ரோட்டில் நடந்த இச்சம்பவத்தால் இரண்டு குழந்தைகளும் அனாதையாகியுள்ளனர்.