LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையின் தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனா 20 வயது, 17 வயது இரு அணிகளும் சாம்பியன்களாயின

Share

இலங்கையின் தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரியின் 17, 20 வயது அணிகள் இரண்டும் சாம்பியன்களாகி கல்லூரிக்கு பெருமைசேர்த்துள்ளன.

செல்வி குயின்சி தலைமையிலான 20 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் பொலனறுவை பென்டிவெல கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றிபெற்றது.

லயன்சிகா, குயின்சி தலா இரு கோல்களை பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சாம்பியனாகியது.

உமாசங்கவி தலைமையிலான 17 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றிபெற்றது.

உமாசங்கவி (2 கோல்கள்) , கல்சிகா (1 கோல்) கியூஸ்ரிகா (1 கோல்) ஆகியோர் கோல்களை பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சாம்பியனாகியது.

17 வயதுப் பெண்கள் அணி தொடர்ச்சியாக 2022, 2023, 2024 என 3 வருடங்கள் சாம்பியனாகி வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு 17 வயதுப் பெண்கள் அணிக்கு 2022 ஆம் ஆண்டுதான் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடக்கம் வெற்றி வாகை சூடிவருவதும் இவ்வாறான வெற்றிகளுக்கான காரணகர்த்தாக்களாக கல்லூரி அதிபர் மற்றும் உதைப்பந்தாட்ட பயிற்சி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஆகியோரே என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.