Canadian High Commissioner for Sri Lanka Eric Walsh visits Mullaithivu
Share
முல்லைத்தீவு விஜயம் செய்த கனடா உயர்ஸ்தானிகர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்
ந.லோகதநாளன்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் (Eric Walsh) கடந்த 15-10-2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தார்.
மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனைச் சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அவர் கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரினால் கனடா உயர்ஸ்தானிகருக்கு விபரிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தொழித்துறை சார்ந்த அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்