தென்பகுதி மக்கள் மாற்றத்தை விரும்பியதால் எமது மக்களும் இளைஞர்கள் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்
Share
வவுனியாவில் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன்.
மன்னார் நிருபர்
(16-10-2024)
தமிழரசு கட்சியானது எமது பாரம்பரிய கட்சி.தமிழர்களின் அடையாளம் வீட்டுச் சின்னம். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களினால் அடையாளம் காட்டப்பட்ட சின்னம் வீட்டுச் சின்னம்.அவர் தமிழர்களின் அடையாளமாக கருதிக் கொண்டு உள்ளது வீடு. எனவே நீங்கள் அனைவரும் வீட்டுடன் பயணிப் பீர்கள் என எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட இளம் வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்தார்.
வவுனியாவில் 16-10-2024 அன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
இடம் பெறுகின்ற தேர்தல்களில் இளைஞர்கள் போட்டியிட வேண்டும்.மாற்றம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என அனைவரும் கூறுகின்றீர்கள்.
ஆனால் நீங்கள் அரசியலில் வர தயங்குகின்ற நேரத்தில் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஆதங்கம் வன்னி தேர்தல் தொகுதியில் பிர மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது பல மாற்றங்கள் தென்படுகின்றது.
தென்பகுதி மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிய பின்னர் எமது பிரதேச மக்களும் மாற்றம் ஒன்று வேண்டும்.இளைஞர்கள் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
எமது கட்சியில் சில தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக கட்சியில் திருப்தியின்மை காணப்படுகின்றது.தமிழரசு கட்சியானது எமது பாரம்பரிய கட்சி.தமிழர்களின் அடையாளம் வீட்டுச் சின்னம்.எமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களினால் அடையாளம் காட்டப்பட்ட சின்னம் வீட்டுச் சின்னம்.
அவர் தமிழர்களின் அடையாளமாக கருதிக்கொண்டு உள்ளது வீடு.எனவே நீங்கள் அனைவரும் வீட்டுடன் பயணிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.
என்னில் நம்பிக்கை வைத்து என்னுடன் பயணியுங்கள்.முன்னைய அரசியல் பிரதிநிதிகளை விட இனி வரப்போகின்ற புதிய அரசியல் பிரதிநிதிகள் எதனை செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்தியுங்கள்.
எனவே நான் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டத்தில் மன்னாரில் இருந்து போட்டியிடுகின்றேன்.நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு வாக்காளர்கள் மாத்திரம் இல்லாது எனக்கு தனிப்பட்ட முறையில் உங்கள் கிராமங்கள் ஊடாக ஆதரவு வழங்குங்கள்.உங்கள் ஒவ்வொருவரினதும் முயற்சிகள் என்னை வெற்றியாளராக மாற்றும்.அந்த நம்பிக்கையுடன் நான் ஓடிக் கொண்டுள்ளேன்.உங்களிடமும் வந்துள்ளேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா சென்ற மன்னார் மாவட்டத்தின் இளம் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசனுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.