LOADING

Type to search

உலக அரசியல்

ஹிஸ்புல்லா பேஜர்கள் வெடித்து சிதறியது குறித்து புதிய தகவல்!

Share

ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள் வெடித்து சிதறியதில் புதிய தகவல் வெளியானது. கடந்த 27ம் தேதி இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். பின்னர், ஹிஸ்புல்லாக்கள் மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறி வைத்து கடந்த 13ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், பதிலுக்குப் பதில் தாக்குவது என்ற புதிய வியூகத்தை தாங்கள் கையில் எடுத்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், பேஜர்கள் வெடிக்க தொடங்கின. அனைத்து பேஜர்களும் ஒரே நேரத்தில் வெடித்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின. இதனால், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், பேஜர்களுக்குள் பொருத்தப்பட்ட பேட்டரிகள் வெடி டெட்டனேட்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேஜர்கள் வெடித்துள்ளன. பட்டாசுகள் போன்றும் துப்பாக்கிச்சூடு போன்றும் சிறிய வெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னதாக, சிலரில் பாக்கெட்டுகளில் இருந்து புகை வருவதைக் கண்டதாக தெரிவித்தனர். ஆரம்பத்தில் சிறியளவில் வெடிக்கத் தொடங்கியது, பின்னர் சுமார் ஒரு மணி நேரம் இது தொடர்ந்தது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பேட்டரியின் நடுவில் இருந்த வெடிபொருளை எக்ஸ்ரே இயந்திரத்தால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, பேஜர்கள் வெடிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.