இஸ்ரேலுக்கு ‘தாட்’ ஏவுகணை தடுப்பு அமைப்பை அனுப்பியது அமெரிக்கா
Share
இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கும் நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த 1-ம் தேதி நடத்திய ஏவுகணை தாக்குதல் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஈரானுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலடி கொடுக்கவில்லை. எனினும், விரைவில் தாக்குதல் நடத்தலாம் என தெரிகிறது. பதிலடி மரண அடியாகவும், ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் கூறியிருந்தார். அதேசமயம், இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஈரானும் மிரட்டியிருக்கிறது. இந்த நிலையில், ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்’ என்னும் அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பினை (வான் பாதுகாப்பு அமைப்பு) அமெரிக்கா அனுப்பி உள்ளது. அதனை இயக்குவதற்கு 100 அமெரிக்க வீரர்களும் இஸ்ரேல் செல்கின்றனர். இத்தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது