இஸ்ரேலுக்கு இன்று நல்ல நாள் – அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி
Share
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; பிணைக் கைதிகளாக பிடிபட்ட பலர் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்போது ஹமாஸ் தலைவராக உள்ள யாஹ்யா சின்வர். கொல்லப்பட்டது யாஹ்யா சின்வர் தான் என இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்பு எங்கள் தலைவர் உயிரோடு இருக்கிறார் என மறுப்பு தெரிவித்துள்ளது.