LOADING

Type to search

உலக அரசியல்

தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் – எலான் மஸ்க் அறிவிப்பு

Share

உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமானஎலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். அமெரிக்காவில் வரும் நவமபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு வேட்பாளராக டிரம்ப்பும் களம் காண்கின்றனர். இதில் டிரம்பை ஜெயிக்க வைக்க எலான் மஸ்க் படாதபாடு படுகிறார். டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் மேற்கூறிய அறிவிப்பை மஸ்க் தற்போது வெளியிட்டுள்ளார்.

டிரம்புக்கு குறைந்த வாக்கு வங்கி இருக்கும் மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைத்து, பதிவு செய்வது, அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு [பிஏசி] என்ற ஒன்றை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க் . இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார். முக்கியமாக பென்சில்வேனியாவில் இந்த திட்டம் தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார். அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.