“வடக்கு மாகாணத்தில் கனிம வளம் கொள்ளை” என மாகாண ஆளுநர் அமெரிக்கா தூதரிடம் தெரிவிப்பு
Share
நடராசா லோகதயாளன்.
வடக்கு மாகாணத்தின் பல பிரதேசத்திலும் கனிய வளங்கள் திட்டமிடப்பட்ட வகையில் அரசியல்வாதிகளால் சூறையாடப்படுகின்றது
என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) 22-10-2024 அன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே வடக்கு மாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்க தூதுவர் காணி விடுவிப்பு தொடர்பான விபரங்களை தூதுவர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.
ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. வடக்கு மாகாணத்தில் காணி சம்பந்தப்பட்ட பிணக்குகள் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் பாரியளவில் காணப்படுகின்றன எனவும் அவற்றை தீர்ப்பதற்கு தற்போது உள்ள அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதேநேரம் வடக்கில் உள்ள முக்கிய பிரச்சணையாகவும் இயற்கை பாதுகாப்பாகவும. காணப்படும் கனிய வளங்கள் வடக்கு மாகாணத்தின் பல பிரதேசத்திலும் திட்டமிட்டு அரசியல்வாதிகளால் சூறையாடப்படுகின்றது என ஆளுநர் சுட்டிக் காட்டினார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக தெரிவித்ததுடன் இதற்கு ஆளுநரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்