LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் , கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் பரிசளிப்பு விழா

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் பரிசளிப்பு விழா 22-10-2024 பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசை முழங்க விழா மண்டபம் வரை
அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் பாடசாலை அதிபர் P.அரவிந்தன் தலமையில் ஆரம்பமாகின.

இதில் முதல் நிகழ்வாக மங்கள சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்பு உரை, தலைமை உரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து கலை நிகழ்வுகள், விருந்தினர் உரைகள் என்பன இடம் பெற்றன. அதனை தொடர்ந்து கல்லூரியில் பல்வேறு சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு, பரிசில்கள் வழங்கல், சான்றிதழ்கள் என்பவற்றை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் S.P.ஆதித்தன், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட பருத்தித்துறை நகர சபை அபிவிருத்தி உத்தியோகத்தரும், பழைய மாணவர் சங்க தலைவருமான இளையதம்பி சேந்தன், முன்னாள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தமிழ் துறை பேராசிரியர் S.சிவலிங்கராசா சிறி ஜெயவர்தனபுர பல்கலைக் கழக உயிரியல் இராசாயனத் துறை பேராசிரியர் திருமதி லோகினி ஆதித்தன், ஆகியோர் வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.