சிறப்பான இசைப் பயிற்சியோடு மேடையில் ‘அசத்திய’ ‘கவின் கலாலயா’ இசைக் கல்லூரியின் மாணவ மாணவிகள்
Share
‘இசைக் கலாமணி’ ஶ்ரீமதி கவினாளி ரவீந்தர் அவர்களினால் ஆரம்பிக்கப்பெற்று சிறந்த முறையில் இயங்கிவரும் ‘கவின் கலாலயா’ இசைக் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த 20-10-2024 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று மாலை விற்பி நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது.
கர்நாடக பாடல்கள் மற்றும் தமிழிசைப் பாடல்கள் மற்றும் திரை இசைப் பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்கள் என அனைத்து ரக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மாணவ மாணவிகள் மேடையில் பாடல்களை சமர்ப்பித்தனர்.
ஆசிரியை ஶ்ரீமதி கவினாளி ரவீந்தர் அவர்கள் வழங்கிய சிறந்த இசைப் பயிற்சி அன்றையை ஆண்டு விழாவில் அனைத்து மாணவ மாணவிகளையும் நேர்த்தியான சமர்ப்பணத்தை வழங்கக் கூடியதாக இருந்தது என்றே கூறவேண்டும்.
இங்கே காணப்படும் படங்களில் இசை மாணவ மாணவிகளின் பெற்றோர்களினால் ஆசிரியை ஶ்ரீமதி கவினாளி ரவீந்தர் அவர்கள் கௌரவிக்கப்பெறுவதையும் பிக்கரிங் நகரில் அமைந்திருக்கும் சிவன் ஆலய நிர்வாகிகளினாலும் கௌரவிக்கப்பெற்ற ஆசிரியை ஶ்ரீமதி கவினாளி ரவீந்தர் அவர்கள் ஆலயத்தின் பிரதம குரு கோபி ஐயா அவர்களினாலும் ‘அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடக நிறுவனத்தின் அதிபர் விமல் அவர்களினாலும் கௌரவிக்கப்பெறுவதயும் மாணவ மாணவிகள் தங்கள் இசைச் சமர்ப்பணங்களை மேடையில் கூட்டாகவும் குழுவாகவும் வழங்குவதையும் காணலாம்.