துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
Share
துருக்கியின் தெற்கு மாகாணமான அதானாவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கோசான் மாவட்டத்தில் சுமார் 20.13 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக துருக்கியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.