பெண்கள் அரசியலில் பிரவசிக்கக் கூடிய அவர்கள் மனநிலையில் மாற்றம் வேண்டும் என்கிறார் வேட்பாளர் மிதிலைச்செல்வி!
Share
பு.கஜிந்தன்
பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு வாக்களிக்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பெண்கள் அரசியலில் பிரகாசிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார்.
27-10-2024 அன்று சனிக்கிழமை தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம் பெற்ற வேட்பாளரகள் பொதுமக்கள் கேள்வி பதில் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலில் ஆர்வமுள்ள பெண்களின் வகிபாவம் அரசியலில் குறைந்து கொண்டு செல்கின்றது.
தமிழ் மக்கள் சார்ந்து எந்த ஒரு பெண் பிரதிநிதியும் கடந்த பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை.
வடக்கு மாகாணம் சார்ந்து பெண் பிரதிநிதி பாராளுமன்றம் செல்லமைக்கு ஆண்களை நான் குறை கூற விரும்பவில்லை.
அரசியல் கட்சிகளில் திறமையான பெண்களை வேட்பாளராக நிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைதான் நானும் தமிழரசு கட்சியில் 10 வருடங்களாக பல்வேறு பதவி நிலைகளை வகித்தும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் திட்டமிட்ட முறையில் மறுக்கப்பட்டது.
தற்போது விக்னேஸ்வரன் ஐயாவின் தமிழ் மக்கள் கூட்டணியில் மா சின்னத்திரை முறை பாராளுமன்ற தேர்தலில் நான் களமிறங்கியுள்ள நிலையில் நாங்கள் வெற்றி பெற்றால் பாராளுமன்றம் செல்லலாமா என கேட்டேன் அவர் விருப்பு வக்கு அதிகமாகஎ பெற்று பாராளுமன்றம் செல்பவர்கள் செல்லலாம் எனக் கூறினார்.
ஏன் நான் இதை அவரிடம் கேட்டேன் என்றால் அனேகமான கட்சிகள் ஆண் வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வதற்காக பெண்களை வாக்கு சேகரிப்பவர்களாக பயன்படுத்துவார்கள் .
விருப்பு வாக்கில் முன்னிலை பெற்றாலும் இறுதி நேரத்தில் கட்சி இன்னொருவருடைய பெயரை கூறி இவரை பாராளுமன்றம் அனுப்புவோம் வழிபடுங்கள் என கேட்பார்கள் கேட்ட வரலாறுகளும் இடம்பெற்றுள்ளது.
இலங்கை சனத்தொகையில் ஆண்களை விட பெண்களே சதவீதத்தில் அதிகமாக உள்ள நிலையில் பெண்களே பெண்களுக்கு வாக்களிப்பதில்லை.
ஆகவே பெண் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டுமானால் வாக்களிக்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.