தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏஸ்.வியாழேந்திரன் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்கும் முடிவை வரவேற்கின்றோம்
Share
— சங்கு சின்னத்தில் போட்டியிடும் இரா. துரைரெட்ணம் தெரிவிப்பு
(கனகராசா சரவணன் )
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அறைகூவல் விடுத்து தமிழரிடம் ஒற்றுமையை வலுப்பெற வைப்பதற்காக அவர் எடுத்த முடிவை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம். எனவே எதிர்காலத்தில் வலுவான தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் தமிழ் தேசிய பிரச்சினை அபிவிருத்தி போன்ற விடயங்களை பெற பேரம் பேசும் சக்தியாக வலுப்பெற உங்களுடைய வாக்குகளை சங்கு சின்னத்துக்கு அளிப்பதன் ஊடாக நாங்கள் வலுவான சக்தியாக செயல்பட முடியும் என சங்கு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள அவரது ஈ.பி.ஆர்.ஏல்.எப் கட்சி காரியாலயத்தில் நவம்பர் 2ம் திகதி அன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எய்பொருத்தவரையில் மக்களிடம் இருந்து ஆணையை பெறுவதற்காக எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தல் ஒரு வலுவான தமிழர்களின் ஒற்றுமைகளை நிரூபிப்பதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேரம் பேசும் சக்திகளாக மாற்றுவதற்காக சர்வதேச ரீதியாக எமது பிரச்சினை தொடர்பாக சட்டரீதியாக எடுத்து இயம்புவதற்காக மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி மற்றும் பிற விடயங்களை அவதானித்து அமுல்படுத்துவதற்காக நாங்கள் சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம்
தேர்தலில் தமிழ் மக்களாகிய எமக்கு தமிழர்களின் ஏகோபித்த ஒற்றுமையை வலியுறுத்த தமிழ் தேசியத்தை ஒற்றுமையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளை நாங்கள் எடுத்து வெளிப்படுத்துவதற்காகவும் எமது விடயங்களை அடித்து உரித்து பேசுவதற்காகவும் இந்த ஜனநாயக தேடல் களத்தில் நாங்கள் இறங்கியுள்ளோம்.
இந்த பாராளுமன்ற தேர்தல் ஊடாக 2025 ஆம் ஆண்டு பாராளுமன்றம் ஊடாக எமது விடயங்களை பேரம் பேசும் சக்தியாக கொண்டு வருவதற்கு உங்களிடம் நாங்கள் ஆணை கேட்டு நிற்கின்றோம் இந்த ஆணைகளை நீங்கள் எதிர்காலத்தில் எங்களுக்கு வழங்குவதன் ஊடாக வலுவான சக்தியாக் செயல்பட முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 சுயேச்சைக்குழுக்கள் 22 கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளது எனவே மாவட்டத்தில் தமிழர்களுடைய விகிதாசாரத்தை பொருத்தவரையில் மொத்தமாக பாராளுமன்றத்தில் ஐந்து பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும் அதில் விகிதாசார் அடிப்படையில் முஸ்லிம் ஒரு பிரதிநிதியும் தமிழர்கள் நான்கு பிரதிநிதிகளை பெற்றே ஆக வேண்டும் எமக்குள்ள விகிதாசார அடிப்படையில் மாவட்டத்தில் நாங்கள் நான்கு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலுவான என்பதை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாங்கள் நிரூபிக்க வேண்டும்
முன்னாள் இராஜாங்க அமைச்சர எஸ்.வியாழேந்திரன் தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அறைகூவல் விடுத்து தமிழரிடம் ஒற்றுமையை வலுப்பெற வைப்பதற்காக அவர் எடுத்த முடிவை நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகின்றோம் அதேவேளை அந்த முடிவுகளையும் வாக்காக மாற்றுவதற்கு அவரும் அவருடைய கட்சி சார்ந்த தொண்டர்களும் எமக்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் இந்த ஆதரவை வலுப்பெற வைப்பதற்காக உழைப்பதோடு மாவட்டத்தில் மூன்று வலுவான தமிழ் பிரதிநிதிகளை சங்கு சின்னத்திற்கு வழங்குவதற்காக ஆனைகளை மக்கள் தருவார்கள் என்று நாங்கள் நம்புவதோடு எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்பவர்கள் என்பதை நான் நம்புகின்றேன்
அதேவேளை மாவட்டத்தை பொறுத்தவரையில் களம் கண்ட தமிழர்கள் இந்த போராட்டங்களுக்காக பல்லாயிரக்கணக்கான சொத்துக்களை இழந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து 23 ஆயிரத்து 43 முப்பதுக்கு மேற்பட்ட தலைமை தாங்கும் பெண் குடும்பங்களைக் கொண்ட இந்த மாவட்டம் தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்பட முடியாது என வலுவாக தற்சமயம் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற ஜேவிபி யின் ஜனாதிபதி வலுவாக கூறுகின்ற நிலையில் இந்த மாவட்ட மக்கள் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி காட்சிகளுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள் காட்டுவார்கள் என நான் நம்புகின்றேன்.
இந்த மக்கள் சோரம்; போகின்ற மக்கள் அல்ல வலுவாக போராட்டங்களுக்கு உயிர் ஊற்றியவர்கள் அந்த தியாகத்தை அவர்கள் எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நிரூபித்து சங்கு கட்சிக்கும் எனக்கு வாக்களிப்பார்கள் என்பதை சர்வதேசத்திற்கு நாங்கள் பறைசாற்ற விரும்புகின்றோம் ஆகவே வாக்குரிமை என்பது ஒரு சிறப்புரிமை அதனை எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் சங்கு சின்னத்திற்கும் எனது இலக்கமாகிய ஐந்துக்கும் வாக்களிக்குமாறு தங்களிடம் அறைகூவல் விடுக்கின்றேன் ஏன்றார்.