LOADING

Type to search

உலக அரசியல்

13-ம் தேதி வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஜோ பைடனுடன் சந்திப்பு

Share

அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். டிரம்ப் வெற்றியை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஜோ பைடன், அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் டிரம்ப் வருகிற 13-ந்தேதி வெள்ளை மாளிகை செல்கிறார். அங்கு அதிபரின் ஓவல் அலுவலகத்தில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர். இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு ஜோ பைடனை சந்திப்பது இது முதல் முறையாகும்.