LOADING

Type to search

உலக அரசியல்

மார்கோ ரூபியோ வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு – டொனால்ட் டிரம்ப்?

Share

பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோவை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அமைச்சரவை அமைக்கும்போது, அதில் சில இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய இடமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி விவேக் ராமசாமி (38), 2024 அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக களமிறங்கியவராவார். பின்னர் அவர் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டு ட்ரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் துவங்கினார். ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது விவேக்கை ஸ்மார்ட் ஆனவர் என்றும், அவரால் அரசில் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றும் புகழ்ந்தார். ஆக, விவேக்குக்கு ட்ரம்ப் அமைச்சரவையில் முக்கிய இடம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது முறையாக வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்வதில்  டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது