LOADING

Type to search

உலக அரசியல்

ரஷியா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவார் – ஜெலன்ஸ்கி நம்பிக்கை

Share

உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது. உக்ரைனும் இதற்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகிறது. எனினும், போரானது 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை. உக்ரைன் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவ உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இது போரை தீவிரப்படுத்தும் செயல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பலன் ஏற்படாது என்றும் கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார். இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி ஒன்றில், அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையேயான உறவுகள் மற்றும் ரஷிய போர் பற்றிய டிரம்புடனான கடந்த கால விவாதங்கள் ஆகியவற்றை பற்றி குறிப்பிட்டார். ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி டிரம்ப் உங்களை வலியுறுத்தினாரா? என கேட்டதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, நாங்கள் ஒரு சுதந்திர நாடு. இந்த போரின்போது, என்னுடைய நாட்டு மக்களும், நானும், அமெரிக்காவின் டிரம்ப் மற்றும் பைடன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என்று கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறும்போது, டிரம்பின் தலைமையின் கீழ், போரானது விரைவில் முடிவுக்கு வரும் என்றார்.