பதேர் பாஞ்சாலி படத்தில் நடித்த உமா தாஸ்குப்தா மரணம்
Share
பதேர் பாஞ்சாலி படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த உமா தாஸ்குப்தா (84) காலமானார். சத்யஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரமாக நடித்து புகழ்பெற்ற உமா தாஸ்குப்தா (84) நேற்று காலமானார். கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 1955 ஆம் ஆண்டு வெளியான பதேர் பாஞ்சாலி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உமா தஷ்குப்தாவின் மறைவு குறித்து இயக்குநர் சத்யஜித் ரேவின் மகனான சந்தீப் ரே, “சினிமா காதலர்களால் பல தலைமுறைகளுக்கு போற்றப்படுவார் உமா. பதர் பாஞ்சாலி படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். நான் வளர்ந்த பிறகு என்னுடைய தந்தை உமாவின் ஆற்றல் மிகுந்த நடிப்பு குறித்து என்னிடம் எடுத்துரைத்திருக்கிறார். அவர் ஒவ்வொரு காட்சியையும் அழகாக உள்வாங்கி அசலாக நடித்துவிடுவார். இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். அவருடைய சொந்த காரணங்களுக்காக அவர் சினிமாவிலிருந்து அப்போது விலகிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.