அநுர குமார திசநாயக்க தலைமையிலான இலங்கை அரசிற்கு 29 பிரதியமைச்சர்கள் நியமனம்: அவற்றில் ஒரு தமிழரும் ஒரு இஸ்லாமியரும் அடங்குகின்றனர்
Share
புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.10.2024) இடம்பெற்ற நிகழ்வில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்;
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு,
1. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
2. நாமல் கருணாரத்ன – விவசாய, கால்நடை பிரதி அமைச்சர்
3. வசந்த ஜயதிஸ்ஸ – கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர்
4. நலின் ஹேவகே – தொழிற்கல்வி பிரதி அமைச்சர்
5. ஆர்.எம். ஜயவர்தன – வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
6. கமகெதர திஸாநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்
7. டி.பி. சரத் - வீடமைப்பு பிரதி அமைச்சர்
8. ரத்ன கமகே – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்
9. மஹிந்த ஜயசிங்க – தொழிலாளர் பிரதி அமைச்சர்
10. அருண ஜயசேகர – பாதுகாப்பு பிரதி அமைச்சர்
11. அருண் ஹேமச்சந்திர – வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்
12. அன்டன் ஜெயக்கொடி – சுற்றாடல் பிரதி அமைச்சர்
13. முகமது முனீர் – தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர்
14. எரங்க வீரரத்ன – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்
15. எரங்க குணசேகர – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
16. சதுரங்க அபேசிங்க – கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்
17. ஜனித் ருவன் கொடித்துவக்கு – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்
18. கலாநிதி நாமல் சுதர்சன – மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்
19. ருவன் செனரத் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்
20. கலாநிதி பிரசன்ன குமார குணசேன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்
21. டொக்டர் ஹன்சக விஜேமுனி – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்
22. உபாலி சமரசிங்க – கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
23. ருவன் சமிந்த ரணசிங்க – சுற்றுலா பிரதி அமைச்சர்
24. சுகத் திலகரத்ன – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
25. சுந்தரலிங்கம் பிரதீப் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்
26. சட்டத்தரணி சுனில் வதகல – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர்
27. கலாநிதி மதுர செனவிரத்ன – கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்
28. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
29. கலாநிதி சுசில் ரணசிங்க – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்