LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கைப் பொருளாதார வளத்தை உயர்த்தி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் கொண்ட தனது முதலாவது பாராளுமன்ற உரையை வழங்கிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க

Share

இலங்கைப் பொருளாதார வளத்தை உயர்த்தி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் கொண்ட தனது முதலாவது பாராளுமன்ற கொள்கைப் பிரகடன உரையை வழங்கிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அதில் முக்கியமாக இலங்கையின் பொருளாதார வளத்தை உயர்த்தி மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மைகளை உருவாக்குவதே என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னைய ஜனாதிபதிகள் எவருமே இவ்வாறு தேசத்தின் மக்களது நலன்களை கருத்திற் கொண்டு உரைகளை ஆற்றவில்லை என இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அரசியல் விமர்சகர்கள் தங்கள் பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார வியாழக்கிழமை ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை பின்வருமாறு அமைகின்றது

எமது பொருளாதாரத்திற்கு பாரிய மூலோபாய எழுச்சி அவசியம்.அதில் மூன்று அம்சங்கள் அடங்கும் .எமது பொருள் சேவைகள் உற்பத்தித் துறையில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கை மேல்மாகாணம் வழங்குகிறது. அது போலவே ஏனைய பகுதி மக்களின் பங்களிப்பும் அதற்கு அவசியப்படுகிறது.பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பும் அவசியம். மக்களை கைவிட்டுச் செய்யும் பொருளாதார அபிவிருத்தியில் பயனில்லை.மக்களளை மனிதத் தூசிகளாக்கும் பொருளாதாரத்தில் பயனில்லை. அனைத்து பொருளாதார செயற்பாடுகளிலும் மக்களை பங்குதாரர்களாக்க வேண்டும்.

அனைத்து மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்காமல் அதன் நன்மை மக்களை சென்றடையாது. தேசிய நிதி சிறு குழுவின் கைகளில் மாத்திரம் இருக்குமானால் அது அரசாங்கத்திலோ பொருளாதாரத்திலோ ஸ்தீர நிலையை ஏற்படுத்தாது. இயற்கை வளங்கள் பொருளாதார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் அது சிறு குழுவின் கரங்களுக்கு செல்லுமானால் பொருளாதாரப் பயனம் ஸ்தீரமடையாது. சமூகமும் வலுவடையாது. பொருளாதாரத்தின் பயன் நியாயமாக மக்களை சென்றடைய வேண்டும்.

சந்தைப் போக்கை நிர்வகித்து பொருட்கள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக நியாயமான விலையில் வழங்குவோம்

சந்தையைக் கையாள்வது தொடர்பிலும் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எமது நாடு பாரிய சந்தையுள்ள இடமல்ல. சந்தையில் ஏகபோக உரிமை காணப்படுகிறது. நாளாந்த அரிசிப் பயன்பாடு 6500 மெற்றிக் தொன்களாகும். சிறிய சந்தைகளில் ஏகபோக உரிமை உருவாகலாம். பொருளாதார அடிப்படையில் எமது சந்தை நிர்ணயிக்கப்படவில்லை. ஏகபோக உரிமைப்படித்தான் எமது சந்தை நிர்ணயிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகளை ஏற்றி இறக்க அவர்களால் முடியும். நெல் விலையை கூட அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அரிசி விலையையும் அவர்களால் தீர்மானிக்க முடியும். இதனால் பொருட்கள் சேவைகளை பெற பாரிய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மீளவும் சந்தையின் போக்கை மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்கள் சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் மீற முடியாது. போட்டித்தன்மை ஊடாக இதனை செய்ய முடியும். விலைகளை நிர்ணயிக்கலாம். ஆனாலும் சில துறைகளை மேற்பார்வை ஊடாக கையாளலாம். பாராளுமன்றத்தின் ஊடாக நிர்ணயச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.சந்தைகளிலுள்ள திரிபுநிலையை சீர் செய்ய அவை போதுமானது. அது தொடர்பான சட்டங்கள் போதுமானதா என பார்க்க வேண்டும். சில துறைகளை நாம் கையாள வேண்டும். சில துறைகள் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானவை. அவை அரச பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். வலுசக்தி சந்தையை கையாளுகையில் அரசின் பங்கும் இருக்க வேண்டும்.அவை பொருளாதாரத்தில் முக்கியமானவை.இவற்றில் ஏற்படும் சில தடுமாற்றங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அவ்வாறான துறைகளிலும் அரசாங்கத்தின் வகிபாகம் ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துள்ளோம்.

அதே போன்று நிதித்துறை சுதந்திரமாக செயற்பட ஆரம்பித்தால் என்ன நடக்கும். மத்திய வங்கி மேற்பார்வை நிறுவனமாக செயற்படுகிறது. நிதிச் சந்தையிலும் அரச வகிபாகம் இருக்க வேண்டும்.

அடுத்து பரவலடைந்து காணப்படும் சந்தைகளுக்கு பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக கூட்டுறவுச் அமைப்பை வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.சந்தையில் பலமான போட்டியாலராக கூட்டுறவுத்துறையை பயன்படுத்த இருக்கிறோம். பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னேற்றுவதற்காக சில துறைகளை அடையாளங் கண்டுள்ளோம்.

சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் துரித அபிவிருத்தி

சுற்றுலாத் துறையில் பெரும் பாய்ச்சலை செய்யக்கூடிய இயலுமை தொடர்பில் அறிந்துள்ளோம். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் 8 பில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

அடுத்ததாக தகவல் தொடர்பாடல் துறை உலகின் அனைத்து தொழில் துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் நாட்டுக்கு அவசியம். தற்போது எமது நாட்டில் 85 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையினர் மாத்திரமே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை 5 வருடங்களில் 2 இலட்சமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி வருமானம் குறைவாகவே உள்ளது. 5 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் வகையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கல்வி,மொழி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகிறோம்.

அமைவிடத்தின் பயனை பெற்று கப்பற்துறையை முன்னேற்ற நடவடிக்கை

இன்றும் உலக துறைமுகங்கள் கொழும்பு துறைமுகம் வரிசையில் முன்னணி வகிக்கிறது. அமைவிடத்தின் வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலமான வர்த்தக கப்பல்துறை மத்திய நிலையமாக அதனை மாற்ற வேண்டும். சேவைப் பெறுநர்களுக்கு உரிய வகையில் சேவை கிடைக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எமது துறைமுகங்களின் இயற்கை அமைவிடமே எமது வலுவாகும். அதனால் எமது துறைமுகத்தை வலுவான பொருளாதார மையமாக மாற்றியமைப்பதற்கான பாரிய திட்டம் உள்ளது.

விவசாயத்துறையில் புரட்சிகர முன்னேற்றம்

நாட்டில் மிகப்பெரிய விவசாய துறை இருந்தாலும் கடனாளிகளான விவசாயிகளே இன்று நாட்டில் இருக்கின்றனர். விவசாய துறைக்காக நாம் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறோம். விவசாயத்துறை ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது. ஆனால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். சுகாதாரம், கல்வி, இருப்பிடம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றமை பெரும் சமூக பிரச்சினையாகும். விவசாயத்துறை சார் வறுமை பாரிய சமூக அவலமாக மாறியுள்ளது. எனவே விவசாய துறையிலும் பெரும் பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்காக விதைஉற்பத்தி நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம். விவசாய சேவை நிலையங்களை வலுவூட்ட வேண்டும். இலங்கைக்குள் மாத்திரமின்றி ஏற்றுமதியை இலக்கு வைத்த விவசாய உற்பத்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே விவசாயத்துறையில் பாரிய பாய்ச்சலை மேற்கொள்வோம். விவசாயத்தை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பகுதியாக மாற்றியமைக்க வேண்டும்.

ஹெக்டயாருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட பசளை நிவாரணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். மேலும் நிவாணம் வழங்க வேண்டிய துறைகளுக்கு வழங்க இருக்கிறோம்.

அதேபோல் மீன்பிடித்துறையை பலப்படுத்த வேண்டும். எரிபொருள் பிரச்சினையால் படகுகள் கரைகளில் கிடந்தன.படகுகளை மீள கடலுக்கு அனுப்புவதற்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். அதற்கான எமது நீரியல் வளங்களை பெறுமதிசேர் வளங்களாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கிறோம்.

தனியார் துறை உதவியுடன் கனிய வளத்தினால் உச்சபயன் பெற்று பெறுமதிசேர்க்க நடவடிக்கை

கனிய வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். தனியார் துறையினரையும் அந்த பணியில் கைகோர்த்துக்கொள்வோம். அது எமது பொருளாதாரத்தில் புதிய திருப்பு முனையாக அமையும் என்று நம்புகிறோம்.

அடுத்ததாக விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறை. உலகின் வளர்ச்சி கண்ட அனைத்து நாடுகளும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்விற்காக பெருமளவான நிதியை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குகின்றன. புதிய உற்பத்தி மற்றும் விநியோகச் சேவைகளினால் மாத்திரமே புதிய சந்தை உருவாகும். எனவே விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலமும் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை செய்ய எதிர்பார்க்கிறோம். ஆசியாவில் பல நாடுகள் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இது சார்ந்த புதிய சந்தையில் பங்காளராக நாம் தவறிவிட்டோம். சம்பிரதாய முறைகளிலே தொடர்ந்து இருக்கிறோம். அந்த துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் அதற்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்தத் துறையில் பாரிய முன்னெற்த்தை எட்ட எதிர்பார்க்கிறோம்.

டிஜிட்டல் மயமக்கல் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு பங்களிக்க ஹான்ஸ் விஜேசூரிய முன்வந்துள்ளார். நாட்டை முன்னேற்றுவதில் டிஜிட்டல்மயமாக்கல் முக்கியமானது. அந்த இலக்குகளை அடைந்துகொள்ள அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றும்..

அதன் படி நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டிய ஆட்சியே கிடைக்கும் என்பதை கூறியிருந்தோம். அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள ஒரு நாட்டிற்கு அந்த ஒப்பந்தத்தை விடுத்துச் செல்ல முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

அதன்படி சர்வதேச நாணயநிதிய உடன்பாடுகளுக்கு அமைவாக பொருளாதாரத்தை கையாள்வதாக பொதுத் தேர்தலில் மக்களுக்கு உறுதியளித்தோம். அதன் படி பல செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம். தற்போது மூன்றாவது மீளாய்வுக் கூட்டம் தாமதமாகியுள்ளது. இதனை செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தை ஆரம்பிக்க சில காலம் பிடித்தது. பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 17 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். கடன் மறுசீரமைப்பு குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இந்த வாரத்திற்குள் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் 23 ஆம் திகதி கைச்சாத்திட முடியும் என திர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான பயணத்தில் அதில் முக்கியமாக முன்னெடுப்பாகும். கடன் மறுசீரமைப்பும் அதனுடனான உடன்பாடுகளில் அடங்குகிறது. நாம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கடன்மறுசீரமைப்பு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

வர்த்தக சந்தையில் பிணைமுறி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்தோம். இருவருடங்களுக்கு மேலாக பேச்சுகள் நடைபெறுகிறது.கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்யாமல் பொருளாதாரத்தை முன்னெடுப்பது சிரமமானது. கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களின் இறுதிக்கட்டமே நாம் ஆட்சிக்கு வருகையில் காணப்பட்டது. அந்த முன்னெடுப்புகள் சாதகமானதா பாதகமானதா என தற்பொழுது விவாதிப்பதில் பயனில்லை.அது தான் யதார்த்தம். விரைவில் ஒவ்வொரு நாடுகளுடனும் தனித்தனியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.

வர்த்தகக் கடன் தொடர்பில் ஆரம்ப கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் எனநம்புகிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாட்டை இவ்வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய இயலுமாகும். பணியாளர் மட்ட உடன்பாடு இவ்வாரம் எட்டப்படுவதோடு பொருளாதாரத்தை நம்பகமான நிலைக்கு கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும்.

நாம் கொள்கை ரீதியில் எமது பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடிகளுக்கு இந்த நிகழ்ச்சிநிரல் மாத்திரம் போதுமானது என கருதவில்லை.எமது நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இந்த செயற்பாடுகள் போதுமானதாக இருக்கும். ஆனால் எமது பொருளாதார முறைமை பாரிய சரிவை கண்டிருக்கிறது. எமது பொருளாதாரத்திற்கு பாரிய மூலோபாய எழுச்சி அவசியம்.அதில் மூன்று அம்சங்கள் அடங்கும் .எமது பொருள் சேவைகள் உற்பத்தித் துறையில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கை மேல் மாகாணம் வழங்குகிறது. அது போலவே ஏனைய பிரதேச மக்களின் பங்களிப்பும் அதற்கு அவசியப்படுகிறது.பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பும் அவசியம். மக்களை கைவிட்டுச் செய்யும் பொருளாதார அபிவிருத்தியில் பயனில்லை.மக்களை மனிதத் தூசிகளாக்கும் பொருளாதாரத்தில் பயனில்லை. அனைத்து பொருளாதார செயற்பாடுகளிலும் மக்களை பங்குதாரர்களாக்க வேண்டும். அனைத்து மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்காமல் அதன் நன்மை மக்களை சென்றடையாது. தேசிய நிதி சிறு குழுவின் கைகளில் மாத்திரம் இருக்குமானால் அது அரசாங்கத்திலோ பொருளாதாரத்திலோ ஸ்தீர நிலையை ஏற்படுத்தாது. இயற்கை வளங்கள் பொருளாதார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் அது சிறு குழுவின் கரங்களுக்கு செல்லுமானால் பொருளாதாரப் பயணம் ஸ்தீரமடையாது. சமூகமும் வலுவடையாது. பொருளாதாரத்தின் பயன் நியாயமாக மக்களை சென்றடைய வேண்டும்.

சந்தையைக் கையாள்வது தொடர்பிலும் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எமது நாடு பாரிய சந்தையுள்ள இடமல்ல. சந்தையில் ஏகபோக உரிமை காணப்படுகிறது. நாளாந்த அரிசிப் பயன்பாடு 6500 மெற்றிக் தொன்களாகும். சிறிய சந்தைகளில் ஏகபோக உரிமை உருவாகலாம். பொருளாதார அடிப்படையில் எமது சந்தை நிர்ணயிக்கப்படவில்லை. ஏகபோக உரிமைப் படித்தான் எமது சந்தை நிர்ணயிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகளை ஏற்றி இறக்க அவர்களால் முடியும். நெல் விலையை கூட அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அரிசி விலையையும் அவர்களால் தீர்மானிக்க முடியும்.இதனால் பொருட்கள் சேவைகளை பெற பாரிய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மீளவும் சந்தையின் போக்கை மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்கள் சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் மீற முடியாது. போட்டித்தன்மை ஊடாக இதனை செய்ய முடியும். விலைகளை நிர்ணயிக்கலாம். ஆனாலும் சில துறைகளை மேற்பார்வை ஊடாக கையாளலாம். பாராளுமன்றத்தின் ஊடாக நிர்ணயச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.சந்தைகளிலுள்ள திரிபுநிலையை சீர் செய்ய அவை போதுமானதா. அது தொடர்பான சட்டங்கள் போதுமானதா என பார்க்க வேண்டும். சில துறைகளை நாம் கையாள வேண்டும். சில துறைகள் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானவை. அவை அரச பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். வலுசக்தி சந்தையை கையாளுகையில் அரசின் பங்கும் இருக்க வேண்டும்.அவை பொருளாதாரத்தில் முக்கியமானவை.இவற்றில் ஏற்படும் சில தடுமாற்றங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அவ்வாறான துறைகளிலும் அரசாங்கத்தின் வகிபாகம் ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துள்ளோம்.

அதே போன்று நிதித்துறை சுதந்திரமாக செயற்பட ஆரம்பித்தால் என்ன நடக்கும். மத்திய வங்கி மேற்பார்வை நிறுவனமாக செயற்படுகிறது. நிதிச் சந்தையிலும் அரச வகிபாகம் இருக்க வேண்டும்.

அடுத்து பரவலடைந்து காணப்படும் சந்தைகளுக்கு பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக கூட்டுறவுச் அமைப்பை வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.சந்தையில் பலமான போட்டியாலராக கூட்டுறவுத்துறையை பயன்படுத்த இருக்கிறோம். பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னேற்றுவதற்காக சில துறைகளை அடையாளங் கண்டுள்ளோம். சுற்றுலாத் துறையில் பெரும் பாய்ச்சலை செய்யக்கூடிய இயலுமை தொடர்பில் அறிந்துள்ளோம். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் 8 பில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

அடுத்ததாக தகவல் தொடர்பாடல் துறை உலகின் அனைத்து தொழில் துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் நாட்டுக்கு அவசியம். தற்போது எமது நாட்டில் 85 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையினர் மாத்திரமே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை 5 வருடங்களில் 2 இலட்சமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி வருமானம் குறைவாகவே உள்ளது. 5 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் வகையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கல்வி,மொழி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகிறோம்.

இன்றும் உலக துறைமுகங்களின் வரிசையில் கொழும்பு துறைமுகம் முன்னணி வகிக்கிறது. அமைவிடத்தின் வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலமான வர்த்தக கப்பல்துறை மத்திய நிலையமாக அதனை மாற்ற வேண்டும். சேவைப் பெறுநர்களுக்கு உரிய வகையில் சேவை கிடைக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எமது துறைமுகங்களின் இயற்கை அமைவிடமே எமது வலுவாகும். அதனால் எமது துறைமுகத்தை வலுவான பொருளாதார மையமாக மாற்றியமைப்பதற்கான பாரிய திட்டம் உள்ளது