LOADING

Type to search

உலக அரசியல்

செர்பியா ரயில் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம் – அமைச்சர் உள்பட 11 பேர் கைது

Share

செர்பியாவின் சட் நகரின் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் மேற்கூரை கடந்த நவ.1ம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் கடந்த நவ.17 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி கடந்த 3 நாள்களாக போராட்டம் நடந்து வந்தது. இதற்கிடையே, செர்பியாவின் கட்டுமானத்துறை அமைச்சர் கோரன் வெசிக், தனது பதவியை ராஜிநாமா செய்தார். பொதுப் பாதுகாப்புக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டது, பொது ஆபத்தை ஏற்படுத்தியது, ஒழுங்கற்ற கட்டுமானப் பணிகள் ஆகிய குற்றச்சாட்டுகளை போராட்டக்காரர்கள் எழுப்பினர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்றம் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கட்டுமானத் துறை அமைச்சர் கோரன் வெசிக் உள்பட 11 பேரை செர்பிய அரசு கைது செய்தது.