LOADING

Type to search

உலக அரசியல்

ஆதரவாளர்கள் போராட்டம்: பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்

Share

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அவரை விடுதலை செய்ய கோரி இம்ரான்கான் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் அவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூர், பெஷாவர் ஆகிய நகரங்களை தலைநகர் இஸ்லாமாபாத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதன்மூலம் தலைநகருக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், காவல்துறை குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.