LOADING

Type to search

இலங்கை அரசியல்

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியை விற்று அரதிற்கு நிதி திரட்ட வேண்டுமா?

Share

பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி.

ந.லோகதயாளன்.

இந்திய அரசினால் வடக்கு மாகாண விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் கமநல சேவைத் திணைக்களத்தினால் ஏலத்தில் விடப்பட்டு மத்திய அரசிற்கு வருமானம் காட்டுகின்றனர் என தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் ஆதங்கம் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு விவசாயிகளின் நன்மை கருதி 2012 ஆம் ஆண்டு இந்திய அரசினால் 500 உழவு இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அன்பளிப்பாக வழங்க்க்பட்ட உழவு இயந்திரங்களை நேரடியாக விவசாயிகளிடமே வழங்குங்கள் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டபோது வடக்கில் பல ஆயிரம் விவசாயிகள் இருக்கும்போது 500 பேருக்கு மட்டும் பகிர்ந்தளிப்பது கடினம் எனவே அவற்றை கமநல சேவைத் திணைக்களத்திடம் வழங்கி அவர்கள் ஊடாக விவசாயிகளிற்கு சேவையாற்றப்படும் என அப்போதைய ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்டவர்கள் நரித் தந்திரத்தை வகுத்து தமது பிடிக்குள் கொண்டு சென்றனர்.

அதன் பின்பு அந்த உழவு இயந்திரங்கள் இரு ஆண்டுகள்கூட சேவை புரியாது பல பிரச்சணைகள் காரணமாக கமநல சேவை நிலையங்களில் தரித்து நின்றபோது அந்த உழவு இயந்திரங்களை விவசாய அமைப்புக்களிடம் வழங்குமாறு பல தடவை கோரிக்கை விடுத்தோம்.

அவ்வாறான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட சமயங்களில் எல்லாம் 500 உழவு இயந்திரங்களும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பதிவிலேயே இருப்பதனால் கமநல சேவைத் திணைக்களத்தினால் பதிவு மாற்றம் செய்ய முடியவில்லை. வேண்டுமானால் வேறு அரச திணைக்களங்களிற்கே மாற்ற முடியும் என்றனர். இதன்போது ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் செல்வாக்வின் பெயரில் சில உழவு இயந்திரங்கள் வேறு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டபோதும் பயன்பாடு கருதி மௌனம் காத்தோம். ஆனால் தற்போது இந்திய அன்பளிப்பு உழவு அயந்திரங்கள் எனத் தெரிவிக்காது பத்திரிகையில் விளம்பரம் செய்து ஏலத்தில் விற்கப்பட்டும் விட்டது.

இதில் உள்ள மூடு மந்திரம் என்ன என்பதனை அரசு பகிரங்கப்படுத்துவதோடு ஏலத்தின் மூலம் பெறப்பட்ட நிதி அந்த மாவட்ட விவசாயிகளிற்கு வழங்கப்பட வேண்டுத் ஏனெனில் அது இந்திய அரசு விவசாயிகளிற்கு வழங்கிய பொருளே அன்றி அரசிற்கு வழங்கப்பட்டது அல்ல என்றார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

ஏலத்தில் இடம்பெற்றவை தொடர்பில் ஆராயும் அதே நேரம் எஞ்சிய உழவு இயந்திரங்கள் விவசாய அமைப்புக்களிற்கே வழங்க ஏற்பாடு செய்ய முடியுமா என ஆராயப்படும் என்றார்