மட்டக்களப்பில் வயலில் வெள்ளத்தில் சிக்குண்ட விவசாயி ஒருவர் விமானப்படையினர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
Share
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் இரு தினங்களாக சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஒரு விவசாயியை விமானப்படையினர் கெலிகொப்டர் மூலம் 27ம் திகதி அன்று புதன்கிழமை மீட்டனர்.
குறித்த பகுதியிலுள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்கு கடந்த திங்கட்கிழமை (25) சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்திஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் தொடர் கடும் மழை காரணமாக அந்தபகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியதுடன் வீதிகள் பல மூழ்கியதையடுத்து அந்த விவசாயிகள் தமது வாடிகளில் இருந்து வீடுகளுக்கு வெளியேறமுடியாமல் சிக்குண்டுள்ளனர்.
இவ்வாறு சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையினை 27ம் திகதி புதன்கிழமை விமானப்படையினர் மலைவெட்டுவான் வயல் பகுதியில் சிக்குண்ட ஒருவரை கொலி கொப்டரிர் மூலம் மீட்டெடுத்தனர். அதேவேளை கொக்கச்சிமடு பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள 4 குடும்பங்களை மீட்பதற்கு கெலிகொப்டரில் இருந்து கயிறு இறக்கப்பட்டபோதும் அவர்கள் கயறில் ஏறும் பயத்தினால் ஏறமறுத்துள்தனால் அவர்களை மீடகமுடியாமல் கொலிகொப்டர் திரும்பியுள்ளது.
அதேவேளை புல்லுமலை தம்பிட்டி வயல் பிரதேசத்தில் சிக்குண்ட 3 பேரில் ஒருவர் வெள்ளத்தில் நீந்தி கரையேறியதுடன் ஏனைய இருவரையும் பொலிசார் மீட்டுள்ளதுடன் இந்த சிக்குண்ட 4 குடும்பங்களையும் படகின் மூலம் மிட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.