LOADING

Type to search

இந்திய அரசியல்

“தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Share

ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது, “இன்ப, துன்பங்களை மறந்து ஊருக்காக பணியாற்றும் சீருடைப் பணியாளர்களை வரவேற்கிறேன். ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு வருகிறது. மக்களுடைய நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சீருடைப் பணியாளர்களிடம் உள்ளது. அதைதான் திமுக அரசும் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்துறையும் செய்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சீருடைப் பணியாளர்களும் துணை நிற்க வேண்டும். குற்றவாளிகளை பிடிப்பது சாதனை அல்ல குற்றவாளிகளே இல்லை என்பது தான் நம் சாதனையாக இருக்க வேண்டும். இன்று பணி நியமன ஆணைகளை பெற்ற நீங்கள் எதிர்காலத்தில் என்னிடம் விருது பெற வேண்டும்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.