LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

Share

ஜார்க்கண்ட் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றார். இவ்விழாவில் ராகுல், உதயநிதி, மம்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும் வென்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, , ஆளுனர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுனரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், அக்கட்சி தேசிய தலைவர் கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழக துணை முதல்வர் உதயநிதி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.