LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிணற்றுக்குள் தவறி விழுந்த பூசகர் பரிதாபமாக உயரிழப்பு – சுதுமலையில் சம்பவம்!

Share

வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் டிசம்பர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் (வயது 52 ) என்ற பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துக்கொண்டு இருந்தவேளை கால்தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்தார். அவரது சடலம் கிணற்றினுள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.