கவின் நடிக்கும் பிளடி பெக்கர் படத்தின் ‘நான் யார்’ பாடல் வெளியீடு
Share
இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் ‘பிளடி பெக்கர்’. இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் டார்க் காமெடி – திரில்லர் ஜானரில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ‘நான் யார்’ என்ற காணொளி பாடல் வெளியாகி உள்ளது.