LOADING

Type to search

சினிமா

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் அதிக சம்பளம் வாங்கிய அருண் விஜய்?

Share

ராயன் படத்தைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் ‘இட்லி கடை’. இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, வில்லனாக அருண் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஷாலினி பாண்டே மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘இட்லி கடை’ படத்திற்கு அருண் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ரூ.8 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இது மற்ற படங்களுக்கு அவர் வாங்கிய சம்பளத்தை விட ரூ.3 கோடி அதிகமாகும். இது உண்மையாகும் பட்சத்தில் அருண் விஜய்யின் கெரியரிலேயே இது அதிக சம்பளமாக இருக்கும். இதற்கு முன்பு, அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். இதில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டநிலையில், ‘இட்லி கடை’ படத்திலும் அதே மேஜிக்கை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘இட்லி கடை’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது