மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா?
Share
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் 3வது முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் ஏற்கெனவே கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்கள் இவர்கள் நடித்த காதல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்த படங்களில் இவர்கள் இருவரும் நடிப்பில் மிரட்டி இருந்தனர். இதன்பிறகு இவர்கள் இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என ரசிகள் ஆவலுடன் காத்திருந்தனர். இதற்கிடையே, இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாக செய்தி பரவியது. இருப்பினும் இதுகுறித்து இவர்கள் இருவரின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் 3வது முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஷியாம் சிங்கா ராய் பட இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் துவங்க உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால் இந்த திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது. இத்தகவல் உண்மையா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.