LOADING

Type to search

உலக அரசியல்

துருக்கியின் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதல் – 6 வீரர்கள் மரணம்

Share

துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் வழக்கமான பயிற்சிகள் நடைபெற்றன. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதின. இதில் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. அதேசமயம் மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது. எனினும் இந்த விபத்தில் ராணுவ ஜெனரல் உள்பட 6 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.