LOADING

Type to search

இந்திய அரசியல்

கனமழை – சென்னையில் விமான சேவை பாதிப்பு

Share

சென்னையில் தொடர் கனமழையால் 14 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

    தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால், இன்று சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அரியலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல தமிழகத்தில் டிசம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் 14 விமானங்களின் சேவைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் புறப்பாடு, 5 விமானங்கள் வருகை தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் இரண்டு விமானங்கள் தாமதமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. துபாய், சிங்கப்பூர் , இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கான விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.