LOADING

Type to search

இலங்கை அரசியல்

சந்நிதியான் ஆச்சிரமம் முல்லைத்தீவில் வெள்ள நிவாரணம்!

Share

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்துன் வற்றாப்பளை, முள்ளியவளை, கேப்பாப்பிலவு, ஐயனார் குடியிருப்பு, ரெட்பானா, விஸ்வமடு ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 165 குடும்பங்களுக்கு ரூபா 495,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வற்றாப்பளையில் வைத்து 11ம் திகதி புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு ஒன்றினை திருத்தம் செய்வதற்காக
பெரும்பான்மை இனத்தை சார்ந்த திருகோணமலை 10ம் கட்டை, வேப்பம்குளம் பகுதியை சேர்ந்த, எஸ். லியனகே என்பவரிற்கு ரூபா 100,000 நிதியும் வழங்கப்பட்டது.