LOADING

Type to search

இந்திய அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Share

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளன. இதுதொடர்பான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்ததில் தாக்கலான பின்னர், விரிவான ஆலோசனைக்காக நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பப்படும். மக்களவை, மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2029 முதல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.