LOADING

Type to search

உலக அரசியல்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – அமைச்சர் கலில் ஹக்னி மரணம்

Share

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அகதிகள் விவகாரத்துறை  அமைச்சராக செயல்பட்டு வந்தவர் கலில் ஹக்னி. இந்நிலையில், காபுலில் உள்ள அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சர் கலில் ஹக்னி வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தார். அப்போது, அமைச்சக அலுவலகத்திற்கு வந்த நபர் தன் உடம்பில் மறைத்து கொண்டுவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அமைச்சர் கலில் ஹக்னி உயிரிழந்தார். மேலும், அலுவலக ஊழியர்கள் மேலும் 5 பேரும் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. உயிரிழந்த அமைச்சர் கலில் ஹகின் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜுதினின் உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.