“தமிழைக் காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்” – கனிமொழி எம்.பி. பதிவு
Share
தமிழைக் காத்த நம் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. மொழிப்போர் தியாகிகளின் தினமான இன்று 1,076 சதுர அடியில் 8 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள அவர்களின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இருப்பது ஓர் உயிர், அது தமிழுக்காகப் போகட்டும் என முழங்கி தங்கள் உயிரைக் கொடுத்து தமிழைக் காத்த நம் மொழிப்போர் தியாகிகளுக்கு இந்நாளில் வீரவணக்கம் செலுத்தி, ஆதிக்க இந்தித் திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என உறுதியேற்போம்.
“இருப்பது ஓர் உயிர், அது தமிழுக்காகப் போகட்டும் என முழங்கி தங்கள் உயிரைக் கொடுத்து தமிழைக் காத்த நம் மொழிப்போர் தியாகிகளுக்கு இந்நாளில் வீரவணக்கம் செலுத்தி, ஆதிக்க இந்தித் திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.