மரண அறிவித்தல் | அமரர். நடேசு மகேந்திரராஜா (சுதுமலை வடக்கு)
Share
யாழ்ப்பாணம் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, தாவடி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு மகேந்திரராஜா அவர்கள் 13-01-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசு – தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும். காலஞ்சென்றவர்களான சின்னராசா – ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும். காலஞ்சென்ற கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்.
காலஞ்சென்றவர்களான. மகாதேவன், மகாலட்சுமி, மனோகரன் ஆகியோரின் அன்புச்சகோதரனும், பரமேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற யோகானந்தம், மனோகரி. இராசரத்தினம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
தமயந்தி (கனடா), சுகந்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும். யோகநாதன் (கனடா). தயாசீலன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும். கோகுலன், டொமினிகா, கீர்த்திகன், செண்பகா, கரணியா, கிர்க்ஷிகன். கேசிகன், சுருதி ஆகியோரின் பட்சமுள்ள பேரனும், கைலஷின் பட்சமுள்ள பூட்டனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி முதல் 8:00 மணிவரை 4164 Sheppard Avenue East Scarborough (Sheppard & Midland) அமைத்துள்ள Ogden Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 20-01-2025 திங்கட்கிழமை காலை 11:30 மணி தொடக்கம் கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 905-201-7060