LOADING

Type to search

சினிமா

பிரபல மலையாள இயக்குனர் ஷபி மரணம்

Share

1995-ம் ஆண்டு ‘ஆதியத்தே கண்மணி’ படத்திற்கு கதை எழுதி மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் ஷபி(56). அதனைத்தொடர்ந்து, கடந்த 2001-ம் ஆண்டு ‘ஒன் மேன் ஷோ’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது படங்களில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் ஷபி. அவ்வாறு கடந்த 30 ஆண்டுகளாக பல திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவு மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் பலரும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.